Saturday, May 29, 2021

வடையே இல்லாமல் வடகறி செய்வது எப்படி

      தமிழக உணவகங்களில் கிடைக்கும் பிரபலமான உணவுகளில் ஒன்று வடகறி. இட்லி, தோசை, சப்பாத்திக்கு ஏற்ற சுவையான இணை உணவு. சென்னையின் தெருவோர உணவகங்களில் அதிகம் கிடைக்கக்கூடிய உணவு. 

     தமிழகத்தின் மிகவும்  பிரபலமான இந்த வடகறி வடையே  இல்லாமல் செய்வது எப்படி என இங்கு பார்ப்போம் .


 தேவையான பொருட்கள் (Ingredients) :-

கடலைப்பருப்பு  -  1 கப் (முதல் நாள் இரவு நீரில் ஊற வைக்கவும் ) 
சோம்பு - 1 ஸ்பூன் 
சீரகம்  - 1 ஸ்பூன்
மிளகு  - 1 ஸ்பூன்
தனியா - 1 ஸ்பூன் 
பச்ச மிளகாய் - 3 Nos.
தேங்காய் சிறிய துண்டு 
உப்பு - தேவையான அளவு 
வெங்காயம் - 1
தக்காளி - 2 
இஞ்சி பூண்டு - 2 
மிளகாய் தூள் - 2  ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் தாளிப்பதற்கு
பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், அன்னாசிப்பூ 
கறிவேப்பிலை 

செய்முறை:

     ஊறவைத்த கடலைபருப்பை மிக்சியில் போட்டும் ஒன்றும் பாதியாக அரைத்து கொள்ளவும். அரைக்கும்போது இரண்டு பச்ச மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து அரைக்கவும். கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன்  எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதை போட்டு, உதிரி உதிரி வரும் வரை வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும். 

கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான உடன் மசாலா பொருட்களான பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், அன்னாசிப்பூ போட்டு வதக்கவும். பிறகு வெட்டி வைத்த வெங்காயத்தை அதில் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். வெட்டி வைத்த தக்காளியை அதனுடன் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியவுடன் இரண்டு ஸ்பூன் மிளகாய் துள் சேர்க்க வேண்டும். 

பச்சமிளகாய், பூண்டு, இஞ்சி, தேங்காய் துண்டுகள், மிளகு, சோம்பு, சீரகம், தனியா ஆகிய பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்து பேஸ்ட் ரெடி செய்து கொள்ளவும். அதனை வதக்கி வைத்த வெங்காயம் தக்காளி உடன் சேர்க்கவும். 

தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பிறகு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். நன்கு கொதிவந்தவுடன் வேகவைத்து உள்ள கடலை பருப்பு மாவை சேர்க்கவும். இரண்டு நிமிடம் கொதி வந்துவுடன் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும் . சூடான இட்லி, தோசைக்கு சுவையான வடகறி ரெடி. 

இந்த ரெசிபி வீடியோ வடிவில் காண இங்கே க்ளிக் செய்யவும் 

https://www.youtube.com/watch?v=lZdTcD1rH60






No comments:

Post a Comment