Monday, May 31, 2021

ஈ.பி.எஃப். (EPFO) அக்கவுண்ட் சந்தாதாரர்களுக்கு அரசு சலுகை

  இந்த தொற்றுநோய் காலத்தின்போது ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்க கோவிட் -19 உதவித் தொகுப்பான பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (பி.எம்.ஜி.கே.ஒய்) இன் கீழ் முதன்முதலில் மார்ச் 2020 இல் தொழிலாளர் வைப்பு நிதியை திரும்பப் பெற அனுமதிக்கும் நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டது.



மீண்டும்  இரண்டாவது முறையாக வருங்கால வைப்பு நிதி அமைப்பு (ஈபிஎஃப்ஒ), சேமிப்பிலிருந்து கோவிட் -19  நிவாரண நடவடிக்கையாக முன்கூட்டியே திரும்பப் பெற அதிகாரப்பூர்வ அனுமதித்து ஒரு  அறிக்கை வெளியிட்டு உள்ளது.  

கடந்த திங்கட்கிழமை வெளியான அந்த அறிக்கையின்படி மொத்த சேமிப்பு தொகையில் 75% அல்லது மூன்று மாத அடிப்படை ஊதியம் (Basic salary) மற்றும் ஊக்க தொகை (Dearness Allowance) இரண்டில் எது குறைவான தொகையோ அந்த தொகையை அல்லது அதற்கு குறைவான தொகையை எடுத்து கொள்ளலாம். 

இதற்கு இணைய வழியாகவும் விண்ணப்பிக்கலாம். EPFO இணைய முகப்பில் KYC (Know your customer) பூர்த்தி செய்து இருக்க வேண்டும். 

No comments:

Post a Comment