உடலின் தசைகளின் வலுவிற்கும், சருமத்தின் மென்மைக்கும் மிகவும் அவசியமாகும். தினை புரதச் சத்து அதிகம் நிறைந்த உணவாகும். தினை கொண்டு செய்ய பட்ட உணவு வகைகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவதால் உடலில் தசைகள் நன்கு வலுபெறும். தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, பளபளப்பு தன்மையை அதிகரித்து இளமை தன்மையை காக்கும். அதிகமான கோபம், கவலை போன்ற உணர்வுகள் நமது உடல் மற்றும் மனதில் சில பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. சிறிது காலத்தில் இவை மன அழுத்தம் பிரச்சனையாக உருவாகிறது. தினை தானியத்தில் மன அழுத்ததை குறைக்க கூடிய வேதி பொருட்கள் அதிகம் உள்ளன. எனவே தினை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் உண்பது மன அழுத்த பிரச்சனைக்கு சிறந்த ஒரு நிவாரணமாகும்.
No comments:
Post a Comment