கேழ்வரகு முருங்கைக்கீரை அடை
#கேழ்வரகுஅடை
#கேழ்வரகுமுருங்கைக்கீரைஅடை
#RagiMurungakeeraiAdai
கோதுமை மற்றும் அரிசி தான் உலகின் பெரும்பான்மையான மக்களின் முக்கிய உணவாக இருக்கிறது. இந்த அரிசி மற்றும் கோதுமைக்கு மாற்றாக உண்ணக்கூடியதும், அதே நேரத்தில் உடலுக்கு சிறந்த போஷாக்கும் அளிக்க கூடியது “சிறுதானியங்கள்” ஆகும். இந்த சிறுதானிய வகையை சேர்ந்தது தான் “கேழ்வரகு”. கேழ்வரகு உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.
கேழ்வரகு புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும். உடலின் சீரான இயக்கத்திற்கும், பிராணவாயு உடலின் அனைத்து திசுக்களுக்கும் சென்று சேர்ப்பதையும் நாம் உண்ணும் உணவில் இருக்கும் புரதச்சத்து செய்கிறது.தினமும் கேழ்வரகில் செய்யப்பட்ட பதார்த்தங்களை காலை உணவாக கொள்வது நாள் முழுவதும் மிகுந்த உற்சாகமாக இருக்கும் தன்மை நமது உடல் பெறுகிறது.
நார்ச்சத்து உண்ணும் உணவு சுலபமாக செரிப்பதற்கு உணவில் நார்ச்சத்து அதிகம் இருப்பது அவசியமாகும். மாமிசம், வறுக்கப்பட்ட உணவுகளில் நார்ச்சத்து இல்லாததால், அதை உண்ணும் போது செரிமான உறுப்புக்கள் அந்த உணவுகளை ஜீரணிக்க அதிகம் சிரமப்படுகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள கேழ்வரகு உணவுகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவது செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும்.
No comments:
Post a Comment